8D Audio - சிவ பஞ்சாட்சரம் - சிவயநம பஞ்சபூதம் மந்திரம் - Siva Panjatcharam (Marskarthik) HD
Please click the link below and subscribe to my other youtube channel(Narbhavi Narbhavi) for more spiritual, mantra videos and siddha videos. https://www.youtube.com/channel/UClYbq6E0qwEWcdmIq_kyhjg?sub_confirmation=1 Listen to 1 hour version here https://youtu.be/oz4NmfzJqDY ஓம் சிவயநம - யநமசிவ - மசிவயந - வயநமசி - நமசிவய Om SivayaNama - YaNamaSiva - MaSivaYana - VayaNaMasi - NamaSivaYa "Si-சி-Fire-நெருப்பு" (கட்டை விரல்) "Va-வ-Air-காற்று" (ஆட்காட்டி விரல்) "Ya-ய-Space-ஆகாயம்" (நடு விரல்) "Na-ந-Earth-நிலம்" (மோதிர விரல்) "Ma-ம-Water-நீர்" (சிறுவிரல்) பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு என்பதாகும். இந்த உலகம் என்பது பஞ்சபூதங்களால் ஆனது. நம்முடைய உடல் மற்றும் மனம் எனும் கூட்டு பொருளும் பஞ்சபூதங்களால் ஆனதே. இந்த பஞ்சபூதங்கள் வலிமை பெற்றிருந்தால் நம் உடலில் நோய்கள் என்பது என்றுமே வராது. இந்த பஞ்ச பூதங்களில் ஒன்று குறைபட்டால் அதற்கு ஏற்றவாறு நம் உடலில் நோய்களும் மனதில் துயரங்களும் வரும். நம் விரல்களில் பஞ்சபூதங்களில் சக்தி ஒளிந்து இருக்கிறது. நம்முடைய கட்டை விரல் என்பது நெருப்பையும், ஆட்காட்டி விரல் காற்றையும், நடு விரல் ஆகாயத்தையும், மோதிர விரல் பூமியையும், சிறுவிரல் நீரையும் குறிக்கிறது. நாம் தியானம் செய்யும்போது இந்த விரல்களை குறிப்பிட்ட விரலோடு இணைந்து தியானம் செய்யும் போது அதற்குரிய பலன்கள் கிடைக்கும். உதாரணமாக பிரிதிவி முத்திரை என்பது நமது மோதிர விரலையும் பெருவிரலையும் இணைந்து செய்யப்படும் முத்திரையாகும். இந்த விரலையும் பெரு விரலோடு இணைக்கும் போது அதாவது நெருப்பு எனும் பூதத்தோடு இணைக்கும் போது அதன் சக்தி அதிகரிக்கிறது. இந்த ப்ரித்வி முத்திரை என்பது நிலத்திற்கான முத்திரை இந்த முத்திரை செய்யும் போது எலும்புகள் பலமாகும், பூமிக்குரிய மன உறுதி, வலிமை போன்றவை உருவாகும், நடக்கும்போது ஏற்படும் தளர்வுகள் நீங்கி நேராக நடக்க முடியும். ஆட்காட்டி விரலான காற்று பூதத்தை பெருவிரலுடன் இணைக்கும் போது நமக்கு ஞானத்தையும் அமைதியையும் தரும், ஆட்காட்டி விரலான காற்று எனும் பூதம் குருவோடு தொடர்புடையதால் அறிவும் அருளும் இந்த முத்திரை நமக்கு தரும். ஆட்காட்டி விரலோடு நடுவிரலை இணைக்கும் போது ஆகாயம் எனும் பூதம் வலிமை பெரும். நம் ஆழ்மனம் விழிப்பு பெரும், இந்த முத்திரையால் நம் காதுகள் தூரத்தில் வரும் மெல்லியா சப்தத்தை கூட கேட்க முடியும். சனி பகவானின் அருள் இந்த முத்திரையால் நமக்கு கிடைக்கும். கட்டை விரலோடு சிறு விரலை இணைக்கும் போது நீர் எனும் பூதம் வலிமை பெறுகிறது, நமது சிந்தனை திறன் இந்த முத்திரையால் பலமடைகிறது, இந்த முத்திரை நமக்கு புதனின் ஆற்றலை பெற்று தந்து நம் கற்பனை மற்றும் சிந்தனை வளத்தை அதிகரிக்கும். #Panjatcharam #Marskarthik #SivayaNama #YaNamaSiva #MaSivaYana #VayaNaMasi #NamaSivaYa #பஞ்சாட்சரம் #சிவயநம #நமசிவய