1 பேதுரு 1:13- 1 Peter 1:13 - MM - 6th Jan 2019 HD
WCF DD (World Christian Fellowship Malai Manna) 1பேதுரு 1:13 “ஆகையால், நீங்கள் உங்கள் மனதில் அரையைக் கட்டிக்கொண்டு தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ள வர்களாயிருங்கள்.” நமது அரைகள் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்னும் இயேசு லூக்கா 12:35ல் கூறுகிறார். அரை என்பது இடுப்பில் கட்டப்படும் கச்சை. இது ஆயத்தத்தை குறிக்கிறது. பஸ்காவை ஆசரிக்கும் போது இஸ்ரவேலர்கள் தங்கள் கச்சைகளை கட்டி ஆயத்தத்தோடு புசித்தார்கள். சர்வாயுத வர்க்கத்தைப் பற்றி பவுல் கூறும்போது சத்தியம் என்னும் கச்சையை நாம் கட்ட வேண்டும் என( எபே 6:14) ல் கூறுகிறார். அடுத்து வெளிச்சத்தின் பிள்ளைகளாகிய நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும். 1தெச 5:6-8 அப்பொழுது கிறிஸ்து வெளிப்படும்போது நமக்கு அது மகிமையை கொண்டுவரும். ( 2தெச 1:8-10) நம் வாழ்வில் பயன்பாடு: பிரியமானவர்களே, இவ்வாறு ஆயத்தத்துடன் நாம் கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து பூரண நம்பிக்கையுடன் இருங்கள். I Peter 1:13 Therefore, with minds that are alert and fully sober, set your hope on the grace to be brought to you when Jesus Christ is revealed at his coming In Luke 12:35, Jesus says Be dressed ready for service and keep your lamps burning. In this verse “dressed” means the loin cloth around your waist. This shows readiness for active service or watchfulness. At the time of Passover, the Israelites were instructed by God to be completely prepares and the meal was to be eaten with a girdle fastened about the waist. When Paul talks about the mighty weapons in Eph 6:14 he asks us to gird our loins with truth. As we are children of light, we have to be sober (1 Thess 5: 6-8). Only then, when Christ appears, we will be glorified (2 Thess 1:8-10) Application in our life: Therefore beloved, let us be ready and look forward with great expectation towards the coming of the Christ.